குழந்தைகளுக்கான பயனுள்ள குறிப்புகள்

குழந்தைகளுக்கான பயனுள்ள குறிப்புகள் :

       மனிதர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு குழந்தையும் ஆறிலிருந்து எட்டு மணி நேரம்வரை அவசியம் தூங்க வேண்டும்.  இல்லையெனில் உடல்நலக்குறைவு ஏற்படும். அதுமட்டுமின்றி, அஜீரண கோளாறுகள், மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளும் ஏற்படும்.

      தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வழக்கமாக்குங்கள். கைகள் மற்றும் கால்களை வீசி விரைந்து நடக்கலாம். இவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி மனம் உற்சாகம் பெறுவது மட்டுமல்லாமல் அதிகாலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு, படித்தால் எளிதாக மனதில் பதியும். சுறுசுறுப்பாக வேலையும் செய்ய முடியும்.

      வேலை செய்யும்பொழுது குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 5 நிமிடமாவது ஓய்வு எடுக்க வேண்டும். கண்களை மூடி மூச்சை மெதுவாக இழுத்து விடவும். கடினமாக வேலை செய்வோர் சிலசமயங்களில் சரியாக மூச்சு விட முடியாது.  அப்போது அவர்களுக்கு தலைவலி உடல் சோர்வு போன்றவை ஏற்படும். அதனால், ஒவ்வொருவருக்கும் ஓய்வு மிகவும் அவசியம்.

      சிரிக்கும் பொழுது மனம் விட்டு சிரியுங்கள். " மனம் விட்டு" என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. இருக்கும் பொழுது மனதில் எவ்வித எண்ணமும் இருக்கக் கூடாது. சிரிக்கும் பொழுது ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது அதை பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் இதயத்துடிப்பு நிற்கவும் வாய்ப்புள்ளது. அதனால் பிரிக்கும் பொழுது எவ்வித எண்ணமும் தோன்ற கூடாது. அது பயனற்றது அன்று. எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித பொலிவு தெரியும்.

    மனம் விட்டுப் பேச கற்றுக்கொள்ளுங்கள். உங்களது நண்பர்களிடம், நம்பிக்கை உள்ளவர்களிடம் பேச நினைப்பதை வெளிப்படையாக பேசுங்கள். அவ்வாறு பேசுவதால் மனம் சாந்தமடையும். மேலும் அவர்கள் கூறும் வார்த்தைகள் உங்கள் மனதிற்கு அமைதியை தரும் மற்றும் தெளிவைத் தரும்.

     உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!


குழந்தைகளுக்கு உணவு உண்ணும் முறையை கற்றுக் கொடுத்தல் :
      முதலில் உணவு உண்பதற்கு முன் பாக குழந்தைகளை நன்றாக கைகளை கழுவும் படி கூறவேண்டும்.

      பெற்றோர்கள் முதலில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். சத்தான, இயற்கையான உணவுகளைக் கொடுத்தல், மூளை எப்போதும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பாகவே இருக்கும்.சுவை நிறைந்த அதாவது சத்து இல்லாத உணவினை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. அதனால், அவர்கள் செய்யும் செயலிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. உடல் சோர்வு நிலையிலேயே இருக்கும்.

        அது மட்டுமன்றி, பல நாடுகளில் பல நாட்டவர்கள் குழந்தைகளுக்கு வேறு பொருட்களை கொண்டு உணவு உண்ண கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால் அது தவறு. குழந்தைகளுக்கு கையால் உணவை உண்ண கற்றுக் கொடுக்க வேண்டும். சாப்பிடும்போது விரல்களை மட்டும் பயன்படுத்தி உணவு உண்ணுமாறு கூற வேண்டும். பிசைந்து சாப்பிடும்போது உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது.

      உணவை வாயில் வைக்கும்போது சரியான அளவில் வைத்து சாப்பிடவேண்டும் மேலும் உணவை வாயில் வைத்து பின்னர் மூடிய நிலையில் நெல்லும் ஆறு அறிவுறுத்த வேண்டும் அதுமட்டுமன்றி உணவை முடிந்தவரை கீழே அமர்ந்து உண்ணும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். உணவு உண்ணும் போது சற்று குனிந்து சாப்பிட வேண்டும். முடிந்தவரை உணவருந்தும் மேசையின் மீது உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதனால் அஜீரண கோளாறுகள் வர வாய்ப்புள்ளது.

       டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு, ஒரு கையை டேபிளிலேயே தட்டிற்கு அருகே வைத்துக்கொண்டு, இன்னொரு கையைப் பயன்படுத்தி உண்பதற்கும், கீழே அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து, ஒரு கையை கால்களின் மீது மடக்கி வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் சற்று குனிந்த நிலையில் இருந்து உண்பதற்கும் சொல்லித்தர வேண்டும்.

       சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. அதே சமயம் குழந்தைகள் சாப்பிடும் பொழுது அவசரப்படக் கூடாது.

      மேலும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் உணவுப் பழக்கங்களையும் கற்றுக் கொள்கின்றனர்.