புதுக்கோட்டை,மார்ச்.6:அறந்தாங்கி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா  நடைபெற்றது.

 இவ்விழாவில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி  பெற்றோர்களிடம்  மாற்றுத் திறன் குழந்தைகளை  பாதுகாப்பாக வளர்ப்பது   குறித்தும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றியும் பேசினார்.மேலும்
 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள்  ஏதாவது ஒரு திறனில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு போதுமான வசதிகளை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவிற்கு அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர்  முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.


இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு ) சிவயோகம்    வரவேற்றுப் பேசினார்.

இவ்விழாவில் 22 மாணவர்களுக்கு மூன்று சக்கர நாற்காலி. காதொலி கருவி. நடவண்டி. மூளை முடக்குவாத நாற்காலி போன்ற  5 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி  வழங்கினார்கள்..

இவ்விழாவில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள், பெற்றோர்கள் சிறப்பாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரிய பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பார்வதி  நன்றி கூறினார்..