https://southkingprayer.blogspot.com

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06-01-2020 - T.தென்னரசு
காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
06-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 165

அதிகாரம் : அழுக்காறாமை

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
 வழுக்காயும் கேடீன் பது.

பொருள்:

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.
 - சுவாமி விவேகானந்தர்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
Better bend the neck than bruise the fore head
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Embarkment-  கரை, அணை
2. Embassy - அரசியல் தூதர்
3. Equality - சமநிலை
4. Era - சகாப்தம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.குதிரைக்கூடம் என்று அழைக்கப்படும் மண்டபம் எங்குள்ளது ?

 மதுரை

2. ”சாக்கிய முனி” என்பது யாருடைய மற்றொரு பெயர்?

 புத்தர்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. வாலால் நீர் குடிக்கும், வாயால் பூச்சொரியும் - அது என்ன ?

  திரி விளக்கு

2. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான், அவன் யார் ?

 புல்லாங்குழல்


✡✡✡✡✡✡✡✡
Daily English

1. I went outside to get some fresh air
2. I'll meet you at the airport
3. We put the best photos into an album


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

நாவல்

🍊 நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும்.

🍊 நாவல்பழத்தின் தாயகம் இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகும்.

🍊 இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும் இயல்பு கொண்டது.

🍊 புளோரிடா, கலிபோர்னியா, அல்ஜீரியா, இஸ்ரேல் போன்ற வெப்ப மண்டல பகுதிகளிலும் வளர்கிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

தங்கத் தாம்பாளம்

அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசிக்கும் காசி விஸ்வநாதர் கோயிலில், அன்று திடீரென்று ஒரு தங்கத் தாம்பாளம் காணப்பட்டது. அதில், என்னிடம் யார் மிகவும் பிரியமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு காசி விஸ்வநாதரான என்னுடைய பரிசைத் தருகிறேன் என்றார். பிரியமான அந்த மனிதரிடம், இந்தத் தங்கத் தாம்பாளம் தானாகவே போய்ச் சேரும் என எழுதப் பட்டிருந்தது.

தகவல் அறிந்து அவரவர்களும் காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வந்து கைகளை நீட்டியபடியே தாம்பாளத்தைச் சுற்றி சுற்றி வந்தார்கள். இதற்கு உரியன் யாரோ, அவன் எங்கு இருக்கிறானோ என்று புலம்பிப் பெருமூச்சு விட்ட படியே வந்தவரெல்லாம் திரும்பினார்கள்.

சிவராத்திரி நாள் வழக்கத்தை விட அதிகமாகவே காசி விஸ்வநாதர் சந்நிதியில் கும்பல் இருந்தது. கல்விமான்கள், ஞானிகள், பணக்காரர்கள் என ஏராளமானோர் வந்து இருந்தார்கள். அநேகர் பார்வை தங்கத் தாம்பாளத்தில் இருந்தது. ஆனால், அது நகரவே இல்லை. அந்த சமயத்தில் விவசாயி ஒருவர், இன்றைக்கு சிவராத்திரி கங்கையில போய் ஒரு முழுக்குப் போட்டு விட்டு அப்படியே விஸ்வநாதர் தலையில ரெண்டு வில்வத்தையும் போட்டுட்டு வரலாம், என்று காசிக்கு வந்தார்.

வந்தவர் கங்கையில் நீராடிவிட்டு கோயிலுக்குள் நுழையும் வேளையில், கோயிலுக்கு வெளியில் குஷ்டரோகி ஒருவர் படுத்து இருந்தார். கண்ணீர் சிந்தியவராக வேதனையுடன் இருந்த அவரைக் கண்ட அனைவரும் முகம் சுளித்தபடி சென்று கொண்டிருந்தனர். விவசாயி அவர் அருகே சென்று, ஐயா அழாதீர்கள், உங்களைப் பிடித்து இருக்கும் இந்த துயரம், சீக்கிரம் நீங்கிப் போய் விடும். சுவாமி தரிசனம் செய்துவிட்டு உங்களை என் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன், என்றார். என்று சொல்லிவிட்டு கோயிலுக்குள் நுழைந்தார்.

அவர் உள்ளே போனதும் விலை மதிக்க முடியாத அந்த தங்க தாம்பாளம் அவர் கைக்கு வந்து சேர்ந்தது. கூடவே, இவன் தான் மனிதன் என்று அசரீரி ஒலித்தது. தங்க மனசு படைத்த அந்த விவசாயியை போல நம்மால் நடக்க இயலாவிட்டாலும், பெற்று ஆளாக்கிய பெற்றோர் மீது அன்பு காட்டுவோம். சக மனிதர்களை மதித்து நடப்போம். அப்போது தெய்வம் நம்மைத் தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கும்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

🔮ஆஸ்திரேலியா காட்டுத்தீ: சிக்கி தவிக்கும் விலங்குகள்;தண்ணீருக்காக ஏங்கும் கரடிகள், குட்டிகளை காப்பாற்ற போராடும் கங்காருகள்.

🔮நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: லபுஸ்சேன் இரட்டை சதத்தால் ஆஸ்திரேலிய அணி 454 ரன்கள் குவிப்பு.

🔮சூடான் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு.

🔮திருப்பதியில் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு.

🔮தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.


🔮தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

HEADLINES
🔮Will not pursue chairmanship of Tata Group, says Cyrus Mistry.

🔮2019 recorded most number of stone throwing incidents in Jammu and Kashmir.


🔮219 infants died during December in two of Gujarat’s civil hospitals.


🔮New Delhi faces a year of tough trade negotiations.

🔮Aus vs NZ | Lyon takes five as Australia take big lead in Sydney.

https://southkingprayer.blogspot.com