கேள்வி எண் 120 : காய்ச்சல், இருமல், சளி , பாக்டீரியா,  வைரஸ் கிருமிகள் இதெல்லாம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றுமா?
நோய்கள் பரவுமா??

பதில்: காய்ச்சல், இருமல், சளி , பாக்டீரியா,  வைரஸ் கிருமிகள் இதெல்லாம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றும் ஆனா தோற்ராது!!!!

'" வரும் ஆனா வராது "அந்த மாதிரி.

அந்த நோய்க் கிருமியின் சக்தியை விட நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பொழுது பரவும்.

அந்த நோய்க் கிருமியின் சக்தியை விட நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் பொழுது பரவாது.

நோய்கள் பரவும் என்பது உண்மையாக இருந்தால் , அனைத்து மருத்துவர்களுக்கும் நோய் வந்திருக்க வேண்டும்,  ஏனென்றால் அவர்கள்தான் தினமும் நோயாளிகளை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்,  அவர்களுக்கு ஏன் வருவதில்லை?

ஒரு வீட்டில் பத்து பேர் இருந்தால் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் 4 பேருக்கும் மட்டும் வரும். ஆறு பேருக்கு வராது. இது ஏனென்றால் , நான்கு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. 6 பேருக்கு நோய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

உடனே மெட்ராஸை நமக்கு வரவில்லை என்றால் நம்மிடம் முழுமையாக நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்

ஒவ்வொரு நோய்க்கும் எதிர்ப்பு சக்தி வேறுவேறாக இருக்கும்.

ஒரு நோய்க்கிருமியோ, பாக்டீரியாவோ , வைரஸோ நமது உடலில் புகும் பொழுது அந்த நோயை குணப்படுத்துவதற்கு தேவையான சத்துப் பொருள்களும், அறிவும் இருக்கும் போது மட்டுமே நமக்கு அது வராது.

எனவே புரிந்து கொள்ளுங்கள் எந்த வியாதி உங்களை தொடுகிறதோ, அந்த வியாதியை குணப்படுத்தும் எதிர்க்கும் சக்தி நம்மிடம் இல்லை என்று அர்த்தம்.

எனவே மீண்டும் சொல்கிறேன் ஒரு வியாதி நம்மை தோற்ற வில்லை என்பதற்காக முழுமையாக ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியோடு நாம் இருக்கிறோம் என்று தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

ஊரில் பத்து வியாதி வருகிறது என்றால்,  உங்களுக்கு பத்தும் தோற்றுகிறது என்றால்,  நீங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஊரில் பத்து வியாதி வருகிறது , உங்களுக்கு இரண்டு வியாதி மட்டுமே தோன்றுகிறது என்றால் 80 சதவிகித நோய் தடுப்பு சக்தி உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம்.

ஊரில் பத்து வியாதி வருகிறது , உங்களுக்கு எதுவுமே தோன்றவில்லை, என்றால் மட்டுமே நீங்கள் முழுமையாக ஆரோக்கியத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

எனவே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலைகளான உணவு பழக்க வழக்கம்,  தண்ணீர் குடிக்கும் முறை , காற்றை ஒழுங்கு செய்தல் , தன்னை மறந்து தூங்குதல்,  யோகா , மூச்சுப்பயிற்சி , தியானம் செய்தல்,  கெமிக்கல் இல்லாத உணவுகள் சாப்பிடுதல்,  வீட்டு சாப்பாடு சாப்பிடுதல் போன்ற நற்காரியங்களைச் செய்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளும் வேலையை எப்பொழுதுமே செய்துகொண்டே இருக்க வேண்டும்.

மற்றவர்களின் நோய் நமக்கு பறவ வேண்டுமா?  வேண்டாமா ? என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

எனவே நோய்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு , ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் வேலையை ஆரம்பிப்போம்.

" இயற்கை வைத்தியம்"  ( +91- 9629032767) என்ற  தமிழ்வாணன் ஐயா எழுதிய புத்தகத்தை படியுங்கள் கிருமி தத்துவம் புரியும்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
PH : 9842452508.