🔥  T  N  P  T  F  🔥
🛡  விழுதுகள்  🛡


👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫

2050 கார்த்திகை 1 ♝ &   17•11•2019

🔥
🛡இன்று TNPTF-ன் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது

🔥
🛡இடமாறுதலில் வெளிப்படை; ஆசிரியர்கள் மகிழ்ச்சி -
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், அனைத்து காலியிடங்களும் காட்டப்படுவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். - நாளிதழ் செய்தி

🔥
🛡தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைப் பார்த்து போட்டி போடும் நிலையை ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும்: நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் சுகன்யா பேச்சு.

🔥
🛡DGE - பொதுத் தேர்வுகளுக்கான 10-ஆம் வகுப்பு  மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS - ல் பதிவேற்றம் செய்ய  பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

🔥
🛡L.K.G. & U.K.G. வகுப்புகளுக்கு கட்டாய பணியிடமாற்றம் செய்த ஆசிரியர்களை பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.- நாளிதழ் செய்தி

🔥
🛡மதுரை மாவட்டம், மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்,
விஜய் ரசிகர்கள் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில்
 நடிகர் விஜய் படத்தின், 'ஸ்டிக்கர்'களை, மாணவியருக்கு வழங்கியதற்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

🔥
🛡 அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பவானிசாகர் பயிற்சி இனி அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில் நடைபெறும். பயிற்சி மையத்தில் தங்க வேண்டி இருக்காது.

🔥
🛡 அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 1531  விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡TRB -கல்வியியல் மற்றும் கலைக்கல்லூரிகளுக்கு பேராசிரியர் பணித் தேர்வு - சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

🔥
🛡காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப தகுதியானோர் பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.