இன்றைய திருக்குறள்
குறள் எண் - 228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
 வைத்திழக்கும் வன்க ணவர்.

மு.வ உரை:

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

கருணாநிதி  உரை:

ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.

சாலமன் பாப்பையா உரை:

இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வானில் மிதக்கும் விண்மீன்களை அடைய முடியவில்லை என்பது ஒரு பிரச்சினை இல்லை.ஆனால் விண்மீன்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை தான் பிரச்சினை.
    - அப்துல் கலாம்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

விளக்கம் :

சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உட்கொள்ளும்போது ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
 Important  Words
 Snacks - நொறுக்கு தீனி, சிற்றுண்டி
 Oat - ஓட் தானியம்
 Broth - குழம்பு
 Pearl Millet - கம்பு (தானியம்)

 ✍✍✍✍✍✍✍
பொது அறிவு
1. உலகிலேயே அதிக தபால் நிலையம் உள்ள நாடு எது?

இந்தியா

2. உலகில் தாய்மொழி இல்லாத நாடு எது?

சுவிட்சர்லாந்து

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

 1. இது ஓர் பூ. முதல் பகுதி ஆதவனின் மறு பெயர். பிற்பகுதி தேசந்தந்தையை குறிக்கும். அது என்ன ?

சூரியகாந்தி

 2. வட்ட வட்ட நிலவில் வரைந்திருக்கு, எழுதியிருக்கு, அது என்ன?

நாணயம்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

அறிவோம்! கூறுவோம் ! விவசாயம்!

கொத்தவரக்காய்

🍊 கொத்தவரக்காய் ஒரு சிறு செடிவகை காய்கறிகளில் ஒன்று.

🍊 இதன் காய்கள், செடியில் கொத்துக் கொத்தாக காய்க்கும் இயல்பை உடையது.

🍊 கொத்தவரை, ஆப்பிரிக்க காட்டு வகை செடியிலிருந்து மேம்பட்ட ஒரு வகை தாவரம் ஆகும். உண்ணக்கூடிய ஒரு காயாக இனம் கண்டு பயன்படுத்தியது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான். குறிப்பாக இந்திய-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப் படுகிறது.
.
🍊 சமையலுக்கு பயன் படுத்துவதைக் காட்டிலும் கொத்தவரை விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கார்பிசின் உணவுத் தயாரிப்பு தொழிலில் முக்கிய சேர்க்கைப் பொருளாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலும் பயன்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை

கடவுள் நம்பிக்கை

ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்! என்றார்.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டான் ராஜேஷ். காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும் இராது. இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை, என்றார் முடிதிருத்துபவர்.

ராஜேஷ் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார். முடிதிருத்தும் வேலைமுடிந்து, ராஜேஷ் வெளியே போனார். அவர் போன சற்று நேரத்தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு ஆள் நிற்பதை கடைக்காரர் பார்த்தார். அந்த நபரைப் பார்த்தால், முடிதிருத்தும் கடையை மாதக் கணக்கில் எட்டிப் பார்க்காதவர் போலத் தோன்றியது. அவ்வளவு அடர்ந்தும், சடைபிடித்த முடியும் தாடியும் இருந்தன.

அப்போது முன்னால் வந்து போன ராஜேஷ் மீண்டும் கடைக்கு வந்தார். என்ன? என்று கேட்டார் முடிதிருத்துபவர். ஒரு விஷயம்! முடிதிருத்துபவர் யாருமே இல்லை என்று சொல்லலாம், என்று வந்தேன். என்ன உளறுகிறீர்? இதோ! நான் இருக்கிறேன். நானும் ஒரு முடிதிருத்துபவன் தானே? அப்படி இருக்க முடிதிருத்துபவரே இல்லை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? என்று கோபமாகக் கேட்டார் முடிதிருத்துபவர்.

இல்லை! முடிதிருத்துபவர் இருப்பது உண்மை என்றால் அதோ தெருவில் நிற்கிற அந்த ஆசாமி இப்படி அதிகமான தலைமுடியும், சிக்குப்பிடித்த தாடியுடன் இருப்பானேன்? என்று கேட்டார் ராஜேஷ். ஓ! அதுவா? விஷயம் என்னவென்றால், அந்த நபர் என்னிடம் முடிவெட்டுவதற்கு வருவதில்லை! என்றார் முடிதிருத்துபவர்.

சரியாகச் சொன்னீர்கள். அதுதான் விஷயம். கடவுளும் இருக்கவே செய்கிறார். ஆனால், என்ன நடக்கிறது என்றால், மக்கள் அவரை அணுகுவதில்லை. அவரைத் தேடிப் போவதில்லை. அதனால்தான் எங்கும் நிறைய துன்பமும், வேதனையும் உலகில் நிறைந்துள்ளன! என்றார் ராஜேஷ். உண்மையை உணர்ந்தார் முடிதிருத்துபவர்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச் சுருக்கம்.

🔮 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது.

🔮வீழ்த்தப்படவோ, விட்டு கொடுக்கவோ கூடாது; நாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி.

🔮தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

🔮ஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை.

🔮2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

HEADLINES

🔮Pre-school children should learn in mother tongue: NCERT curriculum.

🔮Indian-origin MIT professor Abhijit Banerjee, wife, among economics Nobel winners.

🔮Serving as BCCI president would be challenging, says Sourav Ganguly.

🔮Take action on panel report seeking ban on sachets, pouches within 3 months, NGT tells Centre.

🔮India's first visually challenged IAS officer takes charge as Thiruvananthapuram sub-collector.