அன்பான உபசரிப்புடன்  பரிசுகள் வழங்கி அசத்தும் உணவகம்

  ஆச்சிரியப்படுத்தும்  வரவேற்பும் ,அசர வைக்கும் பரிசுகளும்

                                  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்  பேருந்து நிலையம் அருகில் உள்ள கார்த்திக் உணவகத்தில் எப்போது யார் உணவருந்த சென்றாலும் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பரிசு தருகிறார்கள்.காலையில் உணவு சாப்பிட செல்லும்போது எங்களுக்கு   செய்தி தாள் தருகிறார்கள்.இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சாப்பிட செல்லும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பரிசு பொருள் கொடுத்து அசத்துகிறார்கள்.பாராட்ட வேண்டிய செயல்பாடு.

குழந்தைகளுக்கும் பரிசு :

                                                    பெற்றோர்களுடன் சாப்பிட செல்லும் குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பும் பொருள்களை பரிசாக கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்கள். 

மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு பரிசு

                         உணவகத்தில் உணவு சாப்பிடும்  குழந்தைகள்  மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு மீண்டும் பரிசு தந்து அசத்துகிறார்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிட சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவே இந்த செயல்பாடு என்று உணவகத்தின் உரியமையாளர் வீரப்பன் அன்புடன் தெரிவித்தார்.உணவகத்தில் உணவு அருமையாக இருப்பதுடன்,இவர்களது புதிய முயற்சி பாராட்டுக்குரியது.காலை நாங்கள் உணவு சாப்பிட செல்லும்போது,எங்கள் பிள்ளைகள் சாப்பிட்டு முடித்த உடன் , முழு உணவையும் சாப்பிட்டதற்காக உணவகத்தின் உரியமையாளர் நாட்டரசன்கோட்டைதமிழ்செல்வி வீரப்பன் பிள்ளைகளுக்கு பரிசு வழங்கிய பாராட்டினார்கள்.குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணவு அருந்தி,பரிசுகளுடன் புறப்பட்டனர்.இதனை தேவகோட்டை லெ .சொக்கலிங்கம் நம்மிடம் தெரிவித்தார்.

பாராட்ட படவேண்டிய உணவாக உரிமையாளர் :

                                 சில உணவகங்களில் சாப்பிட செல்லும்போது அங்குள்ள நிருவாகிகளும்,உதவியாளர்களும் என்னவென்று கூட கண்டுகொள்ள மாட்டார்கள்.ஆனால்  இங்கு அன்பான உபசரிப்புடன்,பரிசுகளும் தந்து பாராட்டுவது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அதனையும் தொடர்ந்து பல வருடங்களாக இவர்கள் செய்வது வருவது குறிப்பிடத்தக்கது.உணவகத்தின் உரியமையாளரை பாராட்ட  மொபைல் எண் :9629140016 (வீரப்பன் ) 

 பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கார்த்திக் உணவகத்தின் உரியமையாளர் நாட்டரசன்கோட்டைதமிழ்செல்வி வீரப்பன்,அவரது உணவகத்தில் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ட லக்ஷ்மணன், சிவா ஆகிய பிள்ளைகளுக்கு பரிசு வழங்கிய பாராட்டினார்கள்.