மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், கோவை எஸ்.என்.எஸ்., தொழில் நுட்பக் கல்லுாரியுடன் இணைந்து, வேலை வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்புக்கான கருத்தரங்கம் நடத்தின.💥💥
💥 💥 கல்லுாரி முதல்வர் சுவர்ணலதா ஜோசப் தலைமை வகித்தார். எஸ். என்.எஸ்., கல்லுாரி எம்.பி.ஏ., துறை உதவி பேராசிரியர் சாமினி பேசியதாவது:வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களை பற்றிய விபரங்களை தெளிவாக தெரிவிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன், குழு கலந்தாய்வு செய்ய வேண்டும். அப்போது தான் நேர்முக தேர்வில் வெற்றி பெற முடியும்💥💥.
💥💥இந்திய, உலக அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை, சிறிய நோட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதோடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு நன்னடத்தை மிகவும் முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.உதவி பேராசிரியர் ஹரி உள்பட கல்லுாரி ஆசிரியர்கள், நேர்முக தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என பயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் உமாமகேஸ்வரி செய்திருந்தார்.💥💥