அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்!' - நெகிழவைக்கும் துபாய்வாழ்  தமிழர்
👫👫மதிய உணவில்லாத காரணத்துக்காக, பள்ளிக்குப் படிக்க வருவதை நிறுத்திய கொடுமையைத் தடுக்க, காமராஜர் தனது ஆட்சியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்து, வறியவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வழிவகுத்தார்.👫👫

👫👫காலை உணவுத்திட்டம்
கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், மாணவர்களுக்குக் காலை உணவுத்திட்டத்தைத் தொடங்கி, ஏழை மாணவர்களின் காலைப்பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறார், துபாயில் வசிக்கும் தமிழர் ஒருவர்.👫👫
👫👫கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது, மேலக்குட்டப்பட்டி. இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகிறார்கள். 👫👫
👫👫இந்தக் கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமம். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் 100 நாள் வேலைக்கும், கரூரில் இயங்கிவரும் பல்வேறு டெக்ஸ்டைல்ஸ்களுக்கும் கூலி ஆள்களாகப் போய் வேலைபார்ப்பவர்கள். இவர்களின் பிள்ளைகள் அனைவரும் இந்தத் தொடக்கப்பள்ளியில்தான் படித்துவருகிறார்கள். ஆனால், அவர்களின் பெற்றோர்கள் அதிகாலையிலேயே வேலைக்குக் கிளம்பும் சூழல் ஏற்பட்டதால், தங்கள் பிள்ளைகளுக்குக் காலை உணவைச் சரிவர வழங்கமுடியாத சூழல் இருந்துவந்தது. 👫👫காலை உணவு இல்லாமல் தவித்த பல மாணவர்கள் பள்ளிக்கு வந்தபிறகு மயங்கிவிழுவதும், படிப்பைவிடும் சூழலில் சிக்குவதுமாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், தமிழகம் முழுக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துவரும் துபாயில் வசிக்கும் தமிழரான ரவி சொக்கலிங்கம் என்பவரிடம், தங்கள் பள்ளி மாணவர்களின் பரிதாப நிலையை, அந்தப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியையான பிருந்தா தெரிவித்திருக்கிறார்.👫👫

👫👫காலை உணவு சாப்பிடும் மாணவர்கள்
உடனே ரவி சொக்கலிங்கம், மேலக்குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்களின் காலைப்பசியைப் போக்க, காலை உணவுத்திட்டத்தை தனது செலவில் செய்து, மாணவர்களை நெகிழவைத்திருக்கிறார். திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவரான ரவி சொக்கலிங்கம், பி.எஸ்.என்.எல் அதிகாரியாக இருந்தார். பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த பதினைந்து வருடங்களாக துபாயில் கட்டடப் பொறியாளராக இருந்துவருகிறார்.👫👫
👫👫 பத்து வருடங்களாக, தமிழகத்