குறைபாடு குழந்தைகளிடம் இல்லை, கற்றுக்கொடுக்கும் பெற்றோர்களிடமும்,ஆசிரியர்களிடமுமே உள்ளது - எழுத்தாளர் பாலபாரதி பேச்சு

    நேற்று காரைக்குடி புத்தக கண்காட்சியில் பேசிய எழுத்தாளர் பாலபாரதி பல்வேறு நடப்புகளை அழகான  கோபத்துடன் பதிவு செய்தார்.( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) நமது குழந்தைகள் அனைத்துமே நல்ல குழந்தைகள்தான்.நான் எனது பிள்ளையை அருகில் உள்ள அரசு பள்ளியில்தான் படிக்க வைக்கின்றேன்.இன்று கல்வி பெரும் கேள்விக்குறியாகி விட்டது.கடைக்கு சென்று காசு கொடுத்து பொருள் வாங்கும்போது, பொருளை மாற்றி கொடுத்தால் ஏன் இப்படி கொடுக்கிறாய் என்று கேட்கின்றோம்.ஆனால் , இன்று காசு கொடுத்து பிள்ளைகளை படிக்க வைக்கின்றோம்.அவர்கள் சரியாக சொல்லி தராவிட்டால் நாம் அவர்களிடம் கேள்வி கேட்க இயலவில்லை.கேட்டால் பள்ளியை விட்டு விரட்டி விடுவார்கள்.என்ன கொடுமை இது? ஒரு தலைமுறையை அழித்து விட்டோம்.தொடர்ந்து அழித்து கொண்டு உள்ளோம்.
                                             குழந்தைகளுக்கு வாசிக்க கற்று கொடுங்கள்.எனது வீட்டில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை மொபைல் போனை தொடுவது கிடையாது.கேபிள் கனெக்ஷன் கிடையாது.மூன்று மாதம் தொடர்ந்து உங்கள் குழந்தையின் அருகில் இருந்து ,அதன் முன்பாக வாசித்து  பாருங்கள்.கண்டிப்பாக உங்கள் குழந்தையும் வாசிக்க ஆரம்பித்து விடும்.( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) நாம் அதனை செய்யாமல் எனது குழந்தை வாசிக்க வாசிக்கவே இல்லை என்று சொன்னால் எப்படிங்க அது சரியாகும்? தொலைக்காட்சி என்கிற பெயரில் நாம் பல தொல்லைகளை வீட்டுக்குள் அழைத்து வந்து விடுகிறோம்.
                             நான் தமிழத்தில் பல ஆயிரம் பள்ளிகளை பார்த்து விட்டேன்.உங்கள் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) வயது காலத்தில் உங்களோடு  முஸ்லீம்,கிறித்துவ நண்பர்கள் படித்தார்கள்.ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் மதம் பார்த்து ஒவ்வொரு தனி,தனி பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.என்ன நாடு இது? எங்கே போய்க்கொண்டு உள்ளோம்? நீங்கள் சென்னையில் இருந்து திருப்பதி வரை வரை செல்லும்போது தமிழ்நாடு கடந்து விட்டால் அனைத்துமே விவசாயம் தான்.பி.இ . முடித்தவர்கள் விவசாயம் பார்க்கின்றனர்.ஆனால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து இடங்களையும் பிளாட் போட்டு வீடு கட்டி மணல் ,செங்கல் ஆக்கி கொண்டு உள்ளனர்.தமிழகத்தில் பெரும்பாலும் விவசாய கூலிகளாக வடநாட்டு மக்கள்தான் உள்ளனர்.நம்ம ஆளு எல்லோரும், 100 ரூபாய் திட்டம் உள்ளது .அதில் அவரும் காசு போதும் என்று உள்ளனர்.
                                         அனைவரும் நன்றாக யோசித்து பாருங்கள்.தனியார் பள்ளியில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் வெறும் 5,000 சம்பளம் வாங்குவபவர்கள்.அவர்கள் பணி என்பதே கேள்விக்குறி ? அவர்களை நம்பி பிள்ளைகளை சேர்க்கும் நீங்கள் அரசு பள்ளியில் 50,000 சம்பளம் வாங்கும்,பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வில்லை ? எப்படிங்க சார் கல்வி வளரும்.உங்கள் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) குழந்தைகளை புத்தக கண்காட்சிக்கும் ,புத்தகம் விற்கும் இடங்களுக்கும் அழைத்து சென்று வாரம் ஒரு புத்தகம் வாங்கி கொடுத்து அதனை படிக்க செய்தால் மட்டுமே நமது குழந்தைகள் நமக்கான குழந்தைகள் ஆவார்கள்.வாசிப்பை நேசிப்போம் என்று அருமையான உரை நிகழ்த்தினார்.நன்றி.அன்புடன் லெ .சொக்கலிங்கம், காரைக்குடி.