🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
14-10-2019
இன்றைய திருக்குறள்
குறள் எண்- 495

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
 நீங்கின் அதனைப் பிற.

மு.வ உரை:

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

கருணாநிதி  உரை:

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.

சாலமன் பாப்பையா உரை:

முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
 சாதி, மதம், இனம் வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழும் நாம் ஒரு திருநாளில் ஏற்றும் குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம், மெழுகுவர்த்தி கிறிஸ்துவர்களின் அடையாளம், அதை ஏற்றும் நான் ஒரு இஸ்லாமியன். இது தான் எங்கள் இந்தியா.
   - அப்துல் கலாம்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.

விளக்கம் :
மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும் பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர் என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words
 Fish - மீன்
  Fox - நரி

 Forg - தவளை
 Giraffe - ஒட்டகச்சிவிங்கி
 Goat - வெள்ளாடு, ஆடு
✍✍✍✍✍✍✍
பொது அறிவு
 1. உலகில் நூறு வருடங்களுக்கு மேல் வாழும் உயிரினம் எது ?
 ஆமை

2. உப்பை அதிகமாக விரும்பி உண்ணும் உயிரினம் எது?
 முள்ளம்பன்றி
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
 1. பேச்சு கேட்குது. ஆனால் பேசுபவர் தெரியவில்லை -அது என்ன?
 வானொலிபெட்டி

2. விரல் இல்லாமல் ஒரு கை -அது என்ன ?
 தும்பிக்கை

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் ! விவசாயம்!

பீர்க்கங்காய்

🌽 பீர்க்கங்காய் வெள்ளரி இனத்தைச் சேர்ந்த கொடிவகையான காய்கறி வகையாகும்.

🌽 வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். இதில் நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் உள்ளன.

🌽 தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பயிர் செய்யப்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை

மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.

விரல்களால் மணலில் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.

நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.

இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச் சுருக்கம்.
🔮தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி.

🔮கர்தார்பூர் வழித்தடத்தை வரும் நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய மந்திரி ஹர்சிம்ராத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

🔮வடகிழக்கு பருவமழை அக்.17-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

🔮ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மஞ்சு ராணி.

🔮தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் விபத்தை தடுக்க புதிய பில்லர் பாக்ஸ்கள் அமைப்பு: மின் துறை அதிகாரிகள் தீவிரம்.

🔮மும்பையில் நடைபெற்ற உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார் சென்னை வீரர் பிரக்யானந்தா.

🔮தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

HEADLINES

🔮India beats South Africa by an innings and 137 runs in second Test, clinch series.

🔮PM Modi dares Opposition to include special status for J&K in poll manifestos.

🔮World’s attention now on Tamil Nadu: CM Palaniswami.

🔮India, Japan to hold joint military exercise from October 19.

🔮PM Modi to inaugurate Kartarpur corridor on November 8.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪