💣💣மின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் சேர்ந்தும் நெருக்கடி
💣💣: மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில் இணைந்தும், தமிழக மின் வாரியத்தின் கடன் அதிகரித்த படியே உள்ளது. மொத்த கடன் விரைவில், 1 லட்சம் கோடி ரூபாயை எட்டவுள்ளது.
💣💣தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம், அரசு மானியம் வாயிலாக, ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.இந்த வருவாய், மின்சாரம் மற்றும் எரிபொருள் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம் போன்றவற்றுக்காக செலவிடப்படுகிறது. மேலும், தனியாரிடம், அதிக விலைக்கு மின்சாரம், நிலக்கரி மற்றும் உபகரணங்கள் வாங்கப்பட்டதால், வரவை விட செலவு அதிகமாகி, ஆண்டுதோறும், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. கடன் வாங்கும் நிலைமை உருவானது.💣💣
💣💣இதனால், புதிய மின் திட்டங்களை, வாரியத்தால் செயல்படுத்த முடியவில்லை.இந்நிலையில், மாநில மின் வாரியங்களின் நிதி நிலைமையை சரிசெய்ய, மத்திய அரசு, 'உதய்' என்ற திட்டத்தை துவக்கியது.இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., நிலவரப்படி, மின் வாரியங்களின் மொத்த கடனில், மாநில அரசுகள், 75 சதவீதம் ஏற்க வேண்டும்.💣💣
💣💣அந்த காலத்தில், தமிழக மின் வாரியத்தின் கடன், 81 ஆயிரத்து, 312 கோடி ரூபாய்.அதில், அதிக வட்டி செலுத்தக் கூடியது, 30 ஆயிரத்து, 420 கோடி ரூபாய். தமிழகம், 2017 ஜனவரியில், உதய் திட்டத்தில் இணைந்தது. உடன், மின் வாரியத்தின் அதிக வட்டி கடனில், 75 சதவீதத்தை, அதாவது, 22 ஆயிரத்து, 815 கோடி ரூபாயை, தமிழக அரசு ஏற்றது.💣💣 அதிக வட்டி செலுத்தக் கூடியதில் மீதியுள்ள, 7,605 கோடி ரூபாய் கடனை அடைக்க, வாரியம் கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்ட வேண்டும்.கடன் பத்திரங்கள் வாங்குவோருக்கு, கடனுக்கான வட்டியை விட, சற்று குறைந்த வட்டி வழங்கலாம்.💣💣

💣💣ஒரே சமயத்தில், பணமும் தர தேவையில்லாததால், வட்டி செலவு மிச்சமாகும் என, முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடன் பத்திரங்கள் வெளியிடப் படவில்லை.இந்நிலையில், உதய் திட்டத்தில் இணைந்தும், தற்போதைய நிலவரப்படி, மின் வாரியத்தின் கடன், 90 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது விரைவில், 1 லட்சம் கோடி ரூபாயை எட்ட உள்ளது. அதில், பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன், தமிழக பவர் பைனான்சிடம் வாங்கிய கடன் மட்டும், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், 2016ல் வீசிய, 'வர்தா' புயல்; டெல்டா மாவட்டங்களில், 2018ல் வீசிய, 'கஜா' புயலால், வாரியத்திற்கு, 4,000 கோடி ரூபாய்க்கு மேல், இழப்பு ஏற்பட்டது.புதிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்த ஆணை, சந்தை மதிப்பை விட அதிகம் வழங்குவதாக புகார்கள் எழுகின்றன. இது போன்ற காரணங்களால், வாரியத்தின் கடன் அதிகரித்து வருகிறது. 💣💣💣💣இது தொடர்பாக, உயரதிகாரிகள் விசாரணை நடத்தினால், நிதி நெருக்கடியை தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.-💣💣💣💣 -