தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? 


தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள்
*சேலம்
 *ஈரோடு
*தர்மபுரி
* கிருஷ்ணகிரி
 *திருப்பூர்
 ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.