தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து வசூலான தொகை எத்தனை கோடி தெரியுமா?


 தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் இதுவரை ரூபாய் 25 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

 தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் முககவசம் தனிமனித இடைவெளி மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத11,47, 001 பேர் மீது இதுவரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக  தமிழக அரசு கடந்த 10ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 12,628 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

 தனிமனித இடைவெளி மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் காய்கறி அதிக பொருட்களை வாங்க நீண்ட தூரம் செல்ல கூடாது எனவும் செல்பவர்களுக்கு கட்டாயம்  இ பாஸ்இடம் பெற்றிருக்க வேண்டுமெனவும் மருத்துவக் காரணங்களுக்காக வெளியே செல்பவர்களுக்கு மட்டுமே இ பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகம் முழுவதும் முக கவசம் அணியாத காரணத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு எண்ணிக்கை 11. 22லட்சமாகும் . சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் எண்ணிக்கை 51,115 என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களிடமிருந்து மாநிலம் முழுவதும் இதுவரை 25 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.