தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ராஜினாமா!


  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டு வந்த விஜய் நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வரும் 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். எனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி  பொறுப்பு வகித்து வந்த விஜய் நாராயணன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பு வகித்து வந்த விஜய் நாராயணன் கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்றார். 

*சென்னை இந்திய சட்ட நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் பொறுப்பு வகித்து வந்தார்.

* 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டார். இவர் திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி பொதுக்குழு உறுப்பினராகவும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  நியமிக்கப்பட்டார்.

*நாட்டின் பழமையான வழக்கறிஞர் சங்கங்களில் ஒன்றான மொட்ராஸ்பார்  அசோசியேஷன் தலைவராக  பதவி வகித்து வருகிறார். 

மேலும் இது போன்ற பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளைத்  தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.