'வெற்றிக் கொண்டாட்டத்தை உடனடியாக தடை செய்க' - மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் 


தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை உடனடியாக தடை செய்ய உத்தரவிட வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில பேரவைத் தோதல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகத்தில் திமுகவும், மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், கேரளத்தில் இடதுசாரி முன்னணி, அசாமில் பாஜக, புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் முன்னணியில் இருந்து வருகின்றன.

இதையடுத்து மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் முன்னணியில் உள்ள கட்சியின் தொண்டர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாட பொது இடங்களில் கூடி வருகின்றனர்.

இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை உடனடியாக தடை செய்ய உத்தரவிட வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னதை தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தது