தமிழகத்தின் இன்றைய (24.05.2021) கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  தமிழகத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 77 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 26 என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும்  உயிரிழப்பு 404 பேர் என  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  சென்னையில் இன்று மட்டும் 4,985 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.