பொறியியல் மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தேர்வு! உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.


  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தேர்வுள் நடத்தி முடிக்கப்பட்டு ஜூலை 30-ஆம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று வீடியோ கான்பரசிங் மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பேசியதாவது;

 2017 ஆம் ஆண்டு ரெகுலேஷன் படி யூ.ஜி., பி.ஜி பட்ட படிப்பு தேர்வுகள் வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் தொடங்கும். 2013 ரெகுலேஷன் இல் எழுதிய யூ .ஜி  மாணவர்கள் தேர்வு ஜூன் 14-ஆம் தேதி தொடங்கும் மற்ற மாணவர்கள் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத விரும்பினால் தேர்வுக்கான பணம் கட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பணம் கட்டாமல் இருந்த மாணவர்கள் இன்று முதல் 3ம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் அண்ணா பல்கலை கழகம்  தவிர மற்ற பல்கலைக் கழகங்களுக்கு ஜூன் 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி தேர்வு முடிக்கப்படும். ஜூலை 30ஆம் தேதிக்குள் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.