தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
 தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று அதாவது
 கிருஷ்ணகிரி
 தர்மபுரி
 சேலம்

 ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இடி மின்னல் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும்
ஈரோடு
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
 திருவண்ணாமலை
 திருச்சிராப்பள்ளி
திருப்பத்தூர்
வேலூர்

 ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கடலோர மாவட்டங்களான
புதுவை
 காரைக்கால்

 பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்  புவியரசன் தெரிவித்துள்ளார்.