தேர்தல் வெற்றிக்குப் பின் தமிழகம் முழுவதும் இதற்கெல்லாம் தடை. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


  தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளன. அன்றைய தினம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கட்சிகள் தேர்தல் வெற்றிக்குப் பின் பட்டாசுகள் வெடிக்கவும் ஊர்வலம் நடத்தவும் கூடாது எனவும் இதனை கட்சித்தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் கூறிய விதிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும்.  விதிமுறைகளை பின்பற்ற தலைவர்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.