தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா. இன்றைய நிலவரம்! 

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7, 819 பேர் என தமிழக சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இன்றைய உயிரிழப்பு 25 பேர் எனவும் இதில் 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும்  உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 315 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.