தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை .எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த நான்கு நாட்களுக்கு

 கோவை
 நீலகிரி
 தேனி
திண்டுக்கல்

 ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென் தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் ,சென்னையில் வரும் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.