வன்னியர் உள்ஒதுக்கீடு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

 தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.10. 5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த பல தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்கள்.இது சம்மந்தமாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மதுரையைச் சார்ந்த அபிஷ் குமார் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் உச்சநீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திவளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி.