பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பயிற்சி கட்டகங்களை வைத்து மாணவர்களின் திறன்களை சோதிக்கக் கூடாது: பெற்றோர்கள் வலியுறுத்தல் 


பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் விநியோகிக்கப்பட்டுள்ள பயிற்சி புத்தகம், பயிற்சி கட்டகங்களை வைத்து மாணவர்களின் திறன் களை சோதிக்கக் கூடாது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் தொடக்க மற் றும் நடுநிலைப் பள்ளிகள் திறக் கப்படவில்லை. ஆனால், மற்ற வகுப்புகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், கல்வித் தொலைக் காட்சியிலும், ஆன்லைன் மூலமும் பாடம் கற்பிக்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத்துக்கும் பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பாடவாரியாக பயிற்சி புத்தகமும், இணைப்பு பாட பயிற்சி கட்டகமும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பயிற்சி புத்தகத்தைப் படித்துவிட்டு, பயிற்சி கட்டகத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒவ்வொரு பருவத்துக்கும் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களையே மாணவர் கள் படிக்காத நிலையில், தற்போது ஆண்டு இறுதியில் பயிற்சி புத்தகமும், இணைப்பு பாட பயிற்சி கட்டகமும் வழங்கி வினாக்களுக்கு விடையளிக்குமாறு கூறுவது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: இந்த ஆண்டு முழுவதுமே மாணவர்கள் பள்ளி செல்லவில்லை. இதனால், மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசித்தல், எழுதுத லில் பின் தங்கி உள்ளனர்.மேலும், எழுத்துகளை அடையாளம் காண இயலாத நிலையிலும்கூட சில மாணவர்கள் உள்ளனர்.

இந்த சூழலில் பயிற்சி புத்தகத்தை வாசித்து, பயிற்சி கட்டகத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுதுமாறு ஆசிரியர்கள் கூறுகின்றனர். பெற்றோர்களாலும் மாணவர்களுக்கு வழிகாட்ட முடிய வில்லை. மேலும், புத்தகத்தில் உள்ள விரைவு துலங்கல் குறியீடுகளைப்(QR Code) பற்றிய விழிப்புணர்வும் பெற்றோர்களுக்கு இல்லை. இருந்தாலும், அதை செயல்படுத்துவதற்கான ஸ்மார்ட் போன்களும், இணைய தள வசதி யும் பெற்றோர்களிடம் இல்லை.

எனவே, இது போன்ற பயிற்சி கட்டகம், பயிற்சி புத்தகங்களை பள்ளிகள் திறந்த பின்பு வழங்கி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் களோடு மாணவர்களை ஈடுபடுத்தி னால் நன்றாக இருக்கும் என்றனர்.

இது குறித்து கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: மார்ச் மாதத்தில் கரோனா பரவல் குறைந்திருந்தால், பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், மாணவர்களை பள்ளிக்கு வரச் செய்து பயிற்சி புத்தகங்களைக் கொடுத்து, பயிற்சிக் கட்டகத்தை நிரப்பச் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், கரோனா 2- வது அலை தீவிரமாக பரவி வருவதால் பள்ளிகளை திறக்க முடியவில்லை. ஆகை யால், அச்சடிக்கப்பட்ட பயிற்சி புத்தகங்ளையும், கட்டகங்களை யும் மாணவர்களிடம் விநியோகித் துள்ளோம் என்றனர்.