காய்ச்சலுடன் தேர்தல் பணி தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலி

 
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு  அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்த 54 வயதான தலைமை ஆசிரியை உடல்நலம்  பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி தலைமையில் நேற்று உயிரிழந்தார் தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாக கடுமையான காய்ச்சல் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியை விடுப்பு அளிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அவரது தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர் .தேர்தல் பணியில் இருந்த போதே அவர் உடல் நிலை மோசமானதால் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகி இருப்பதாக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.