கொரோனா   தடுப்பூசி போட்டுக்கொண்டால் சொத்து வரியில் சலுகை டெல்லி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!!


 கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி ஒரு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. நோய்களை தடுக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன் வராத நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.