சென்னையில் மறுவாக்குப்பதிவு. நாளை மாலை வரை பிரச்சாரம் செய்யலாம் தேர்தல் ஆணையம் அனுமதி.

 சென்னை வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் பி நாளை மாலை வரை பிரச்சாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதியன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

 இதில் வாக்குப்பதிவு முடிந்த இயந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூன்று மாநகராட்சி ஊழியர்கள் என்றும் பைக்கில் எடுத்துசெல்லப்பட்ட இயந்திரம் பழுதான விவிபேட்  இயந்திரங்கள் இவை பயன்படுத்தப்படவில்லை என விளக்கம் அளித்தார்கள்.

 பைக்கில் கொண்டு செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்துள்ளது என தேர்தல் அதிகாரி பிரகாஷ் சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர் களுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் தலைமை தேர்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியிருந்தது.

வேளச்சேரி தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாலை வரை அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.