அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறை. தமிழக அரசு அதிரடி உத்தரவு! 

தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அரசு ஊழியர்கள் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 எனவே வாக்குப்பதிவு நாளன்று அனைவருக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது. ஆனால் அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதால் அவர்களை இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 விடுமுறை நாளன்று பணியாற்றியதற்காக ஈடுசெய்யும் விதமாக ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் அந்த விடுப்பு இந்த மாதத்திற்குள் எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வளைத்தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி.