தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் நீலகிரி கோவை உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 15. 4. 2021 தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும்

 நீலகிரி
 கோயம்புத்தூர்
தேனி
திண்டுக்கல்
 சேலம்
 தர்மபுரி
 திருப்பூர்
 ஈரோடு

 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
 16 .4 .2021 அன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்
நீலகிரி
 கோயம்புத்தூர்
 சேலம்

 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் .17.4. 2021 தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் .
18 .4.2021 ,19. 4. 2021 இந்த நாளன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .