தமிழகத்தில்  ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவு!

 தமிழகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று ஒரு மணி நிலவரப்படி 39. 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 40. 48 சதவீத வாக்குகள், குறைந்தபட்சமாக ராணிப்பேட்டையில் 39.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும்,சென்னையில் 37.16 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.