இந்த மாவட்டத்தில் ஏப்ரல் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை-CEO அறிவிப்பு! 


தஞ்சாவூர் மாவட்டத்தில் 03-04 -2021 அன்று சட்டமன்ற தேர்தல் 2021 க்காண பயிற்சி வகுப்புகள் அனைத்து நிலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி மையங்களில் நடைபெற உள்ளது. 01-04 -2021 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து பணி நியமன ஆணைகள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சார்பு செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஆணைகளை பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் அனைவரும் தவறாமல் 03-04- 2021 அன்று பயிற்சியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


 ஏற்கனவே முதல் இரண்டு பயிற்சியில் கலந்துகொண்ட இதர பணியாளர்கள் பயிற்சியில் வழங்கப்பட்ட  வழிமுறைகளின்படி 05-04- 2021 அன்று அவர்களுக்கு உரிய பயிற்சி மையத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் தேர்தல் பணியை தொடர்ந்து புறக்கணிக்கும் அலுவலர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 மீறியதாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாகவும் 03-04- 2021 மற்றும் 05-04 -2021 ஆகிய நாட்களுக்கு தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பார்வை [1]ல் காணும் செயல் முறைகளின்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 IMG-20210402-WA0001