செய்முறை தேர்வுகள் முடிந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு 



செய்முறை பொதுத்தேர்வு முடித்த, 187 அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.செய்முறை பொதுத்தேர்வு மட்டும், திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, முதல் பேட்ஜ் மாணவர்களுக்கான, செய்முறை தேர்வுகள் முடிவடைந்தன. இத்தேர்வில் பங்கேற்ற, 187 பள்ளி மாணவர்கள் இன்று முதல், பொதுத் தேர்வுக்கு தயாராக உதவியாக, விடுமுறை அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து, இன்று வரை 169 பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, 108 மையங்களில் செய்முறை பொதுத்தேர்வு நடத்தப்படும். தேர்வுகள் முடிந்ததும் இம்மாணவர்களும், வீட்டிலிருந்து படிக்கலாம்.

முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''கொரோனா தொற்று காரணமாக, மாணவர்கள் கூடுவதை தவிர்க்க, வீட்டிலிருந்தே படிக்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்தந்த பாட ஆசிரியர்கள், மாணவர்களுடன் போனில் தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பர். இந்த விடுமுறை அறிவிப்பு, அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும்,'' என்றார்.