+2 பொதுத் தேர்வு ரத்தா?நாளைய கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை!

 தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது எனவே தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.இந்த நிலையில் நாளை மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழகத்தின் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா?என்பது குறித்து தமிழக முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை கேட்ட பின்னர் முதல்வர் இது குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இது +2 மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.