தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு.
வருகிற 26 கொரோனாவுக்கு ஆன புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில்கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அதனுடைய முழு விவரங்கள் இதோ:
* திரையரங்குகள் உடற்பயிற்சிக் கூடங்கள் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது .
*பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை, சென்னை உள்பட மாநகராட்சிகள் நகராட்சிகளில் சலூன் கடைகள் மற்றும் அழகுநிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை
* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
* புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரை கட்டாயம் இ-பாஸ் அவசியம் எனவும் உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி.
* வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகள் மற்றும் கப்பல் பயணிகளுக்கு கட்டாயம்இ-பாஸ் தேவை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* தனியார் அரசு பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை .
* இறுதி ஊர்வலங்களில் அனுமதி அளிக்கப்பட்ட 50 நபர்களில் இருந்து 25 நபர்கள் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* திருமணம் மற்றும் திருமண சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் இருந்து அனுமதி 50 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* தமிழகத்தின் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment