கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி

***கொரோனா தடுப்பூசிக்கான 2-வது டோஸை பிரதமர் மோடி இன்று செலுத்திக்கொண்டார்.

***நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸை பிரதமர் மோடி இன்று செலுத்திக்கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

***முன்னதாக கொரோனா தடுப்பூசியான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை கடந்த மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் மோடி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கோவோக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.