நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!!
நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 13 பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பேட்டை செந்தமிழ் நகரில் வீடு வீடாகச் சென்று சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வீடு வீடாகச் சென்று சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments
Post a Comment