தேர்தலில் வாக்களிக்க வந்த 105 வயது முதியவர் இடம் தேர்தல் அதிகாரிகள் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் கோவையில் அரங்கேற்றம்!
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த 105 வயது முதியவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கோவை பகுதியைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர் 1916 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி பிறந்தார். தற்போது அவருக்கு 105 வயது இந்த நிலையில் இன்று சட்டமன்ற தேர்தலை ஒட்டி மாரப்ப கவுண்டர் தனது வீட்டிலிருந்து சுமார் 2 ஆயிரம் அடி தூரம் தனியே நடந்து சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்
. அப்போது 105 வயாது நபர் வாக்களித்து செல்வதாக தேர்தல் பணி நடத்தும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் மாரப்ப கவுண்டர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இது அங்கு கூடியிருந்தவர்களை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வருவதாக கூறினார். காமராஜர் ,காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளை தான் நேரடியாக பார்த்து உள்ளதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்களை தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி உள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
Post a Comment