IGNOU இக்னோ தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை மார்ச் 31 வரை நீட்டிப்பு.
.. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொலைதூரக் கல்வி ஜனவரி பருவத்துக்கான சேர்க்கை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
MOST READ முதல்-அமைச்சர் அறிவித்தபடி 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது கல்வித்துறை திட்டவட்டம்
தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் ஆன் லைன் (https://ignouadmission.samarth.edu) வாயிலாக விண்ணப்பிக் கலாம். கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்து கொள்ளலாம்.
மேலும் பல்கலைக்கழக மண்டல அலுவல கத்தை 044-26618040 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். குறிப்பிட்ட சில இளங்கலை, டிப்ளமா மற்றும்சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments
Post a Comment