முகத்தின் அழகை உயர்த்த உதவும் சூப்பரான  ரோஜாப்பூ பேஸ்பேக்!

 முகத்தின் அழகினைக் கூட்ட வேண்டும் எனில் நிச்சயம் ரோஜாப்பூ ஃபேஸ்பேக்கினை உங்களுக்கு உதவு;ம். இதை எப்படி செய்வது என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

ரோஜாப் பூ- 2

கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

வைட்டமின் ஈ காப்சியூல்- 2

செய்முறை: ரோஜாப் பூவின் இதழ்களை ஆய்ந்து நீரில் அலசிக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து ரோஜாப் பூ இதழ்களைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.

ரோஜாப் பூ நீருடன் கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ காப்சியூல் சேர்த்து அரைத்தால் ரோஜாப்பூ ஃபேஸ்பேக் ரெடி. இந்த ரோஜாப் பூ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் முகத்தின் அழகு கூடும். இயற்கையான பொருட்கள் உள்ளதால் இது நிச்சயம் உங்களின் அழகை உயர்த்தும்.