தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறந்தால் கடும் நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில்
ஒருசில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்தால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
கடந்த
சில நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தகவல் மிக
அதிகமாகி வருகிறது. இதனை அடுத்து 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு அனைவருக்கும் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி
பள்ளிகளையும் மூட உத்தரவிட்டது
மேலும்
கல்லூரி மாணவர்களிடையே கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து கல்லூரிகளுக்கும்
விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் ஒருசில தனியார் பள்ளிகள் மற்றும்
கல்லூரிகளில் வகுப்புகள் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த
நிலையில் தற்போது சுகாதாரத்துறை இது குறித்து எச்சரிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு விதிமுறைகளை மீறி பள்ளி, கல்லூரிகளை
நடத்துபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என சுகாதார செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
0 Comments
Post a Comment