மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ். சிபிஎஸ்இ அறிவிப்பு!

 நமது தமிழ் செய்தி வலைத்தளத்தில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் கல்வி சார்ந்த தகவல்கள் அனைத்தும் பதிவிடப்பட்டு வருகிறது பார்த்து பயனடையவும்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் தேவை என்றால் விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்கப்படும் என சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பல பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்கள் பெரும்பாலோனோர் வீடுகளிலேயே ஆன்லைன் வகுப்புகளில் படித்துவருகிறார்கள. மேலும் கொரேனா காரணமாக பலர் தங்களுடைய சொந்த ஊருக்கு மீண்டும் சென்றுவிட்டனர். இதன்காரணமாக மாணவர்களுடைய கல்வி தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 7 வரை பொதுதேர்வுகள் நடைபெறவுள்ளது. 12 வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் வரும் மே 4 முதல் ஜூன் 14 தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையெடுத்து சிபிஎஸ்இ கல்வி இயக்குநரகம் மாணவர்களுக்கான இடமாறுதல் சான்றிதழ் வழங்க முடிவுச் செய்துள்ளது. மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் அருகாமை பள்ளிகள் சேர்ந்துகொள்ள இந்த இடமாறுதல் சான்றிதழ் உதவியாக இருக்கும் என சிபிஎஸ்இ இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இடமாறுதல் சான்றிதழ் தேவைப்படும் மாணவர்களின் விண்ணப்பத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த இடமாறுதல் சான்றிதழ்) இந்த கல்வி ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மட்டுமே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு சிபிஎஸ்இ கல்வி தொடர்பான தேர்ச்சி சான்றிதழ்,மதிப்பென் சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.