பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை!

* அரசு  விடுமுறைகளை மீறி பள்ளி கல்லூரிகளை நடத்துபவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறைச் செயலர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் எச்சரித்துள்ளார்

.* கொரோனா மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

.* அதன்படி கடந்த கொரோனாவுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் மறு உத்தரவு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

*. இதனை அடுத்து அரசியல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக சுகாதாரத்துறை ஆனது விதித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு விடுமுறைகளை மீறி பள்ளி கல்லூரிகள் நடத்துபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வளைத்தளத்துடன் இனைந்திருங்கள். நன்றி