மக்களே உஷார்... வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை !! 

இன்றுமுதல் அடுத்த 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கி பணி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இன்று முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என நிலை உருவாகியுள்ளது. இன்று(மார்ச் 27) மாதத்தின் கடைசி சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுகிழமை என வழக்கமான விடுமுறை நாட்களாகும்.


அதன்பிறகு 29ஆம் தேதி ஹோலி பண்டிகை, 31ஆம் தேதி நிதியாண்டின் இறுதி நாளாகும், ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி கணக்கு முடிக்கும் தினமாகும், 2ஆம் தேதி புனித வெள்ளி, 4ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை என இந்த 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

இடையில் உள்ள மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய 2 தினங்களில் வங்கிகள் செயல்படும். 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கி பணி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் ஹோலி பண்டிகைக்கு விடுமுறை கிடையாது. வட மாநிலங்களில்தான் விடுமுறை. இதேபோல 31ஆம் தேதியும் நிதியாண்டின் இறுதி நாளன்று விடுமுறை கிடையாது என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.