தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
மாவட்டங்கள் பின்வருமாறு:
 கோவை
 நீலகிரி
சேலம்
 திண்டுக்கல்
 கன்னியாகுமரி

 உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல் வருகிற 26-ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது .சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது