கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படும் ஆவாரம் பூபற்றி தெரிந்து கொள்வோம்!

முகத்தில் சில பெண்களுக்கு மீசை போன்று முடி இருக்கும். இதை போக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அலவு எடுத்து கொண்டு தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்தில் தேவையில்லாத முடி உதிர்ந்துவிடும். முடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ செம்பருத்தி, தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது உடனே நிற்கும். கூந்தலும் நன்கு வளரும்.

சிறிது ஆவாரம் பூவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து. வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தலைகுளிக்கும்போது கடைசியாக வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலச பளபளப்பாகும். இதனால் உடல் நிறம் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும். ஆவாரம் பூவுடன் சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் தேஜஸ் பெறும்