கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும். தமிழக அரசு அறிவிப்பு !

 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் போனஸ் அளிக்கப்படும் என தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது.

 இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு; 

கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் ஆக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும் முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு வரை 240 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு விகிதாச்சார டிப்படையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

 அரசு ஊழியர்களுக்கும் பணியின் அடிப்படையில் ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியம் பெறுவோருக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.