பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? தமிழக அரசு விளக்கம்! 

நமது தமிழ் செய்தி வளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக பதிவிடப்படுகிறது: கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஏரிக்கரையோரம் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தது தொடர்ந்து கோட்டை பகுதி உள்ள வாத்துகளும் செத்து மடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேரள கால்நடைத்துறை இணை இயக்குனர்  சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மனித உடற்கூறு ஆய்வு செய்ததில் பறவைகளுக்கான வைரஸ் தாக்குதலில் இருந்து தெரிய வந்திருக்கிறது.எனவே தடுப்பு நடவடிக்கைகள்  துரிதப் படுத்தப் பட்டது..

 கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழிகள் கொண்டு வர தடை விதித்துள்ளது. கால்நடை துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்பு மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக எல்லைகளில் உள்ள கிராமங்களில் கேரளா கோழிகள் விற்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டைகளை உண்பதால் மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு பறவைகாய்ச்சல் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தமிழக அரசு  தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.