10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குபொதுத்தேர்வு- கட்டாயம்
தமிழகத்தில், வரும், 19ம் தேதி முதல், பள்ளிகள் திறப்பு
திறக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
- 6 நாட்கள் வேலை, சிறப்பு வகுப்புகள் கூடாது.
- தமிழகத்தில், வரும், 19ம் தேதி முதல், பள்ளிகள் திறப்பு
- 'பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது;
- வரும், 19ம் தேதி முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன.
- இந்நிலையில், கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், முதன்மை கல்வி அதிகாரிகளால், நேற்று நடத்தப்பட்டது. இதில், பல்வேறு அறிவுரைகளும், வழிகாட்டி நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- அனைத்து மாணவர்களும், முக கவசத்துடன் மட்டுமே வர வேண்டும்...
- பள்ளி வளாகத்தில் நுழையும் போது, கிருமி நாசினி பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்த பின்பே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.
- மாணவர்களின் உடல் வெப்பநிலை, தினமும் பரிசோதிக்கப்பட வேண்டும். காய்ச்சல் உள்ள மாணவர்களை அனுமதிக்கக் கூடாது
- .பள்ளிகள், காலை முதல் மாலை வரை இயங்க வேண்டும். மதிய உணவு எடுத்து வர அனுமதி வேண்டும்.
- பள்ளி வளாகத்தில் திறந்தவெளியில், மரத்தடியில் பாதுகாப்பான சூழலில் வகுப்புகளை நடத்தலாம். மாணவர்களிடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்
- .அனைத்து மாணவர்களும், தங்களது பெற்றோரின் விருப்பம் பெற்ற பின்னரே, பள்ளிக்கு வர வேண்டும். அவர்களின் எழுத்துபூர்வமாக ஒப்புதல் கடிதம் எடுத்து வர வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை, பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது
- மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து, அச்சம் ஏற்படுத்தக் கூடாது. வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்தி, தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். முதல் இரண்டு நாட்கள், மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' நடத்தி, மனநல ஆலோசனை தர வேண்டும். அதன்பின்னரே, பாடம் நடத்த வேண்டும்
- வளாகங்களில் ஒன்றாக கூடுவது, விளையாடுவது போன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது. மாலை, காலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது
- .அனைத்து பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்றுத் தரும், அனைத்து ஆசிரியர்களும், 100 சதவீதம் பணிக்கு வர வேண்டும்.
0 Comments
Post a Comment