பள்ளிகளில் பெண் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க புதிய இயக்கம் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் .


பள்ளிகளில் பெண் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க புதிய இயக்கம் தொடங்கவுள்ளதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெண் குழந்தைகள்பதிவு விகிதம் பெண்களுக்கு கல்வி என்பது தன்னிறைவுப் பாதையையும், முன்னேற்றத்தையும் அளிப்பதுடன் அவர்களது குடும்பங்கள், சமுதாயம், நாடு ஆகியவை தன்னிறைவு பெறுவதற்கு உதவும். 2018-19-ம் ஆண்டின் படி, பெண் குழந்தைகள் பதிவு விகிதம் மழலையர் கல்வி கட்டத்தில் 101.78 சதவீதமாகவும், தொடக்கக் கல்வி கட்டத்தில் 96.72 சதவீதமாகவும் இருந்தது. கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகள் பதிவு விகிதம் அதிகரிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்ட அணுகுமுறைகளே காரணமாகும். இடைநிலைக் கல்வியில் பெண்களுக்கான தேசிய ஊக்கத் திட்டம் மூலமாக ஊக்குவிப்பு வழங்குவது, ஏற்கனவே உள்ள கஸ்தூர்பா காந்தி பாலர் வித்யாலயாக்களை உயர் மழலையர் வகுப்புகளில் இருந்து, மேல்நிலைக் கல்வி வரை முந்தைய மகளிர் விடுதித் திட்டத்துடன் இணைத்தது, மகளிர் கழிவறைகளை அமைத்தது, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்குவது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.

 சமூக அறிவியலில், ஆராய்ச்சிக்கான, சுவாமி விவேகானந்தா ஒரு பெண் குழந்தை கல்வி உதவித்தொகை வழங்கும் மகளிர் கல்வி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 20 சதவீதமாக உயர்வு தொழில்நுட்பக் கல்வியில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பிரகதி உதவித் தொகை திட்டத்தை வழங்குகிறது. ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.இ.டி.எஸ்., பி.டெக். போன்ற உயர் தொழில்நுட்ப படிப்புகளில் பெண்கள் பதிவு 2016-ல் 8 சதவீதமாக இருந்தது. 2020-21-ம் ஆண்டில் அது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் ஆன்-லைன்மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இ-கற்றல் வசதியை அனைத்து மாநிலங்கள் ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியதாகும்

. சில மாநிலங்களில், பள்ளி ஆசிரியர்களைப் பயிற்சியாளர்களாகக் கொண்டு, தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் பள்ளிகள் திறந்த பின்னர் தற்காப்பு பயிற்சியை சிறந்த முறையில் அளிக்க முடியும். புதிய இயக்கம் வரும் ஆண்டில் பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்க்க இயக்கம் ஒன்றைத் தொடங்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதில் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகள் இடைநிற்றலைத் தவிர்ப்பதாகும். பட்டியலிடப்பட்ட நடவடிக்கைகள், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதுடன், பெண் குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதைப் பராமரிக்க உதவும். இதற்கு ஏற்பவும், தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரைகள் படியும், கஸ்தூர்பா காந்தி பால வித்யாலயாக்கள் வலுப்படுத்தப்படும். இதற்காக மத்திய அரசு பாலின உள்ளீட்டு நிதியம் ஒன்றையும் அமைக்கவுள்ளது. அனைத்து பெண்களுக்கும் தரமான கல்வி வழங்கி நாட்டின் திறனைக் கட்டமைக்க இது பயன்படுத்தப்படும். இந்த நிதி மூலம், பெண் குழந்தைகள் கல்வியை அணுகி தன்னிறைவு பெற்று விளங்க அரசு உதவும். பெண் குழந்தைகளின்சமூக உணர்வு சாவித்திரிபாய் புலேவின், ‘கல்வி வாழ்க்கையை தன்னிறைவாக்குகிறது' என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ள நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கை இது பிரதிபலிக்கிறது.

 பெண் கல்வி என்பது, பள்ளிகளில் பெண் குழந்தைகள் பதிவு செய்வதுடன் நின்று விடாமல், அதற்கு மேலும் செல்லக்கூடியது என்பதை நாம் உணர வேண்டியது அவசியமாகும். பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பாக கற்பதை உறுதி செய்வதும் அவசியமாகும். பெண் குழந்தைகளின் சமூக உணர்வு, வாழ்க்கைத் திறன்களைச் செழுமைப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்கக்கூடிய வகையில் அதிகாரம் பெறச்செய்வதுடன், அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாகவும் திகழச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.