பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு! 

 தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 2500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற இயலாதவர்கள் ஜனவரி 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகுப்பு தினமும் 200 குடும்ப அட்டைகளை என்ற அடிப்படையில் ஜனவரி 12ஆம் தேதி வரை வழங்கப்படும். விடுபட்டவர்கள் 13ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் பொங்கலுக்காக வெளியூர் செல்பவர்கள் வெளியூரில் தங்கி இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விடுபடாமல் கிடைக்கும் வகையில் இதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகையை குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் வழங்க ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வளைதளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.